மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு அவர்களை வெளியேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்- முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் மத்தியஅரசு கவனம் செலுத்த வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு போர் ஏற்பட்டுள்ளதால், வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். இதனால் பலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக  மத்தியஅமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

scroll to top