மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனையும் அனுமதிக்காக காத்து இருப்பவர்களையும் தரையில் அமர வைத்ததால், அவர்கள் மன வருத்தம் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மக்கள் பிரதிநிதிகள் இடமும் கலந்து ஆலோசனை கூட்டத்தில், மாடுபிடி வீரர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் அவர்களுக்கு உணவு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்து இருந்தோம்.
அப்படி இருந்தும், இன்று வீரர்களை தரையில் அமர வைப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இருக்கை அமைத்து அமர வைக்கப்பட்டார்கள். அப்படி இருந்து, அலங்காநல்லூரில் மட்டும் அசுத்தமான தரையில் மருத்துவமனை வளாகத்தில் அமர வைப்பது மன வருத்தமளிப்பதாக கூறுகின்றனர்.