இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நேரு யுவகேந்திரா புதுக்கோட்டை அமைப்பானது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு செயல்களை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கக்கூடிய மகளிர் மன்றங்கள் இளைஞர் மன்றங்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. அவற்றில் ஒரு நிகழ்வாக இந்திய அரசு செயல்படுத்தி வரும் ஜல் சக்தி அபியான் என்னும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் நிகழ்வினை நடத்தி வருகின்றது. பொது மக்களுக்கு நீரை சேமிக்கவும் மழை நீரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும் நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வழிமுறைகளையும் எளிய முறையில் எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராமிய நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு செய்தி வருகின்றது. காலாடிப்பட்டி அரசினர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீரப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார். வீரப்பட்டி ஊராட்சியில் தலைவர் அழகுபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக கின்னஸ் உலக சாதனையாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் சரவணகுமார் மற்றும் சாக்யா குழுவின் நடன ஆசிரியர் பிரபு கோயமுத்தூர் ஸ்ரீவீரமாத்தி அம்மன் பம்பை குழுவினர் மற்றும் தாய்மை நண்பர்கள் இளைஞர் மன்றம் தலைவர் கோபி தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் திருமதி.முத்துமாரி அன்னவாசல் ஒன்றிய தேசிய தன்னார்வலர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.