மல்லாங்கிணறு பேரூராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டபணிகள்: உதவி இயக்குனர் ஆய்வு

WhatsApp-Image-2022-07-02-at-12.58.36-PM-1.jpeg

மல்லாங்கிணர் பேரூராட்சியில், நடைபெற்று வரும் நகர்புற வேலைவாயம்பு திட்டப் பணிகளை, உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். தமிழக அரசின் நகர்புற வேலைவாயம்பு திட்டத்தின் கீழ் மல்லாங்கிணர் பேரூராட்சியில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி பகுதியில் 75 லட்சம் மதிப்பீட்டில் வரத்துக்கால், ஊரணி தூர்வாரும் பணியினை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ். சேதுராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், 1 கோடியே 48 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட்ட மின்மயான எரிவாயு தகன மேடை அமைக்கப்படவுள்ள இடத்தை உதவி இயக்குனர் பார்வையிட்டார். உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார்,
செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

scroll to top