மலர்களின் பெயரை கண்டறிய புதிய வசதி

WhatsApp-Image-2023-05-05-at-3.33.46-PM.jpeg

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்களின் விபரங்களை அறிய கியூஆர்கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது . இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விபரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள், எந்த சமயங்களில் இவை பூக்கும் என்பது உள்ளிட்ட முழு விபரமும் அறிந்து கொள்ளும் வகை யில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலா பயணிகள் எளிதாக பூக்களின் பெயர்களை கண்டறியலாம் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

scroll to top