இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழக வீரர்கள், தலைவர்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு சுந்தராபுரத்தில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அணிவகுப்பு நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் தமிழக வீரர்கள் மற்றும் தலைவர்கள் படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக செல்வ.முயன்றனர். அப்போது, காவல்துறையினர் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை தடுத்து கைது செய்து அழைத்து சென்றனர். கைதுசெய்யப்பட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்ககத்தில் சார்ந்தவர்கள், காவல்துறை மற்றும் அரசாங்கத்தை கண்டித்தும் கண்டன் முழக்கங்களை எழுப்பினர்.