மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைப்பு

image_750x_6217b39618e04.jpg

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் அதனை மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து அந்த கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளா் முனைவா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகையாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அமைப்புகள் தொடா்ச்சியாக கேட்டுக் கொண்டும் கூட செலவழிக்கப்பட்ட தொகையில் மிகவும் குறைவான தொகையினை அனுமதித்து வருகின்றனர். இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள குறைதீா் அமைப்புகளும் கூட்டங்களை முறையாக நடத்துவதில்லை. அரசு ஊழியர்களுக்கு 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்சை பெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

scroll to top