தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனும் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.இதற்கு கோவை திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் முதல்வரின் முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு. முதல்வர் அவர்களின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் சேர 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது .மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி! இழந்த உரிமை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடத்திய சட்டப் போராட்டத்தினால் கிடைக்கப் பெற்றுள்ளது தமிழக அரசு மருத்துவர்களின் சலுகையை மீட்டு தந்துள்ளதோடு, அதன் பலன்களை தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெறச் செய்த முதல்வருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மருத்துவமேற்படிப்புகளில் 50% ஒதுக்கீடு:சமூக நீதி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி! முதல்வருக்கு நா.கார்த்திக் நன்றி
