மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் 22வது வார்டு முழுவதும் குடிநீர் விநியோகம் பாதிக்கும்

Pi7_Image_1654489369496copy.jpg

மேட்டுப்பாளையம் கோட்டத்துக்குட்பட்ட மருதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 11.08.2022 நடக்கிறது. இதனால் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துறை குடிநீர், தேக்கம்பட்டி குடிநீர், காரமடை -தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகளுக்கு மின் விநியோகம் தடைபடும். குடிநீர் விநியோகம் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்  என்ற காரணத்தால்மேற்குறிப்பிட்ட குடிநீர் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குறிப்பாக கோவை மாநகராட்சி 22 வது வார்டு முழுவதும் உள்ள  மக்கள் தற்போது இருக்கும் குடிநீரை விநியோகம் செய்யும் போது போதுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளவும் என, கோவை மாநகராட்சி 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும்  திராவிடன் அறக்கட்டளையின் தலைவர், கோவை பாபு தெரிவித்துள்ளார்.

scroll to top