உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று இது 28-வது நாளாக நீடிக்கிறது.வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க ரஷியா கடும் போராட்டம் நடத்தி வருகிறது.துறைமுக நகரான மரியுபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் கடந்த 3 வாரங்களாக ரஷியா மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடிய சூப்பர் பவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் ரஷியா போர் விமானங்கள் முலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷிய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசுகிறது.குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் மீது ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது.
மரியுபோல் நகரில் ரஷிய போர் விமானங்கள் ‘சூப்பர் பவர்’ குண்டுகள் வீசி தாக்குதல்
