மரக்கன்றுகள் நடும் விழா

காரியாபட்டி தோணுகால் கிராமத்தில், 300 மரக் கன்றுகள் சாலை ஓரங்களில் நடப் பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தோணுகால், ஊராட்சி மன்றம் சார்பாக மரம் வளர்ப்பு பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தோணுகால் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், 100 நாள் வேலை ஆட்கள் மூலமாக கொன்றை, வேம்பு, அத்தி, அரசமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தோணுகால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் செய்திருந்தார்.

scroll to top