காரியாபட்டியில் புத்தாண்டு மரக் கன்று நடும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடைபெற்றது இன்ஸ்பெக்டர் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில், சார்பு ஆய்வாளர்கள் பிச்சை பாண்டி , திருமலைராஜ், கலைச்செல்வன், பசுமை பாரத அறக்கட்டளை நிர்வாகி ஆசிரியர் பொன்ராம் ஜனசக்தி, பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.