மன்ணாடி மங்கலத்தில் , எம்.ஜி.ஆர். நினைவு நாள்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், மன்னாடிமங்கலம் கிளை கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் அவர்களின் ஆலோசனையின்படி, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக மன்னாடிமங்கலம் கிளைக் கழகம் சார்பில் ,முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின், திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மன்னாடிமங்கலம் தெற்கு கிளை கழக செயலாளர் ராஜபாண்டி செய்திருந்தார். இதில், நிர்வாகிகள் பூசணி செல்லம், பாலு முதலியார், பேச்சி கருப்பு, ஜானகிராமன், பாண்டி, ராமலிங்கம், வண்டிக்கார கருப்பு, அழகுமலை, சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

scroll to top