மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குநர் பாலா

bala-muthumalar832022m1-e1646723505425.jpg

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாபா. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சேது மூலம் விக்ரமுக்கும், நந்தா மூலம் சூர்யாவுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுடன் இயக்குநர் பாலா இணைந்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. முத்துமலர் என்பவரை கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா திருமணம் செய்தார். இந்த நிலையில் 4 ஆண்டுகளாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக தனித்தனியே வசித்துவந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு பிரார்த்தனா என்ற பெண் குழந்தையுள்ளது குறிப்பிடத்தக்கது.

scroll to top