மதுரை வில்லாபுரம் அருகே உள்ள கீரைத்துறை மூலக்கரை பகுதியை சேர்ந்த கண்ணன். இவருக்கும், பாக்கியலெட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்துவந்துள்ளனர்.இந்நிலையில், கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.இதன் காரணமாக, மனைவி பாக்கியலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.கடந்த 2 மாதங்களாக பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியை அழைத்தும், பாக்கியலட்சுமி வர மறுத்துள்ளார்.
இதனால், மனமுடைந்த கணவர், கண்ணன் இன்று காலை மதுபோதையில் திடிரென கீரைத்துறை பகுதியில் உள்ள செல்போன் டவரின் உச்சியில் ஏறி நின்றபடி மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க கோரி தற்கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவலறிந்து, சம்பவம் இடத்திற்கு வந்த கீரைத்துறை காவல் துணை ஆய்வாளர் துரைப்பாண்டி மற்றும் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் பொறுப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், கீழே இறங்க மறுத்தார். விட்டுச்சென்ற கண்ணனின் மனைவியை அழைத்து வந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தன்னுடன் வாழ்ந்தால் மட்டுமே கீழே வருவதாக கண்ணன் கூறியுள்ளார்., அதன்பின் பாக்கியலட்சுமி சம்மதம் தெரிவித்ததன் பேரில், மனம் இறங்கிய உயிருக்கு பயந்து கண்ணன் டவரில் இருந்து வேகவேகமாக இறங்கினார்.இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என, காவல்துறையினரும், தீயணைப்பு மீட்புப் படையினரும் இணைந்து கண்ணனுக்கு அறிவுரை வழங்கினர்.மீண்டும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.இந்த தற்கொலை நாடகத்தால் ,2 மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது