முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள கோடம்பாக்கம் நிலம் பஞ்சமி நிலமா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். முரசொலி அமைந்திருக்கும் நிலம், பஞ்சமி நிலம் என்றும் அதனை மீட்டெடுத்து உரியவர்களுக்குத் தர வேண்டுமென்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதை பதிவு செய்த ஆணையம், விசாரணை நடத்தியது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவும் உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் அதற்கு தடை போட்டதுடன், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவரான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விலகியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையில், முரசொலி அறக்கட்டளை சார்பில், எல்.முருகன் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் 22ந்தேதி எல்.முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
