மதுரை மாவட்டம், சோழவந்தானில் மது அருந்த தடையாக இருந்தால் காவல்துறை அமைத்த சிசிடிவி கேமராவை உடைத்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சோழவந்தான் பகுதியில் , குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கில் மதுரை போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் முயற்சியில், சோழவந்தான் பகுதி முழுவதும் சுமார் 48 சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்ற செயல்களை கண்காணிப்பு வலைக்குள் வைத்திருந்தனர். இந்த நிலையில், மது அருந்த தடையாக இருந்ததால் 3 இளைஞர்கள் மது போதையில் சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். இந்த சம்பவத்தை அதே சிசிடிவி காட்சிகளை கொண்டு மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மது அருந்த தடையாக இருந்ததால் சிசிடிவி கேமராவை உடைத்த இளைஞர்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கைது
