மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்ஸ்ரே அறையில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிவலார் பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனா பெருமாள் இவரது மனைவி கௌசல்யாதேவி (32). இவர் ரிங்ரோடு பைபாஸ் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் எக்ஸ்ரே அறையில் காத்திருந்தபோது இவருக்கு சொந்தமான 5 பவுன் தங்க நகையை திருடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கௌசல்யாதேவி கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.