மதுரை விமான நிலையத்தில் ராஜேஸ்வரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் -அமமுக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் பேட்டி

WhatsApp-Image-2023-03-12-at-16.28.17.jpg

மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் என்பவரை, மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் தாக்கிய நிலையில். அமமுகவினர் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் புகாரை எடுக்கவில்லை என்று சாட்சி எழுந்ததால் அமமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான உசிலை மகேந்திரன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆன காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை அவனியாபுரம் காவல் நிலையம் வந்து புகார் மனுவை ஏற்று நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன் கூறுகையில், “மதுரை விமான நிலையமாக எடப்பாடியை கண்ட எங்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், அவர் செய்த துரோகங்களை உணர்ச்சிவசப்பட்டு கோஷமிட்டு சொல்லியுள்ளார். முன்னாள் முதல்வராக இருந்தவர் இந்த சம்பவத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தன்னுடன் வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தன்னுடைய பாதுகாவலர்களை வைத்து ராஜேஸ்வரனை மிருகத்தை தாக்குவது போல் தாக்கியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய 5மணி நேரமாவிட்டது .

தமிழக காவல்துறை தற்போது வரை சிஎஸ்ஆர் போடுவதற்கு கூட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும், காவல்துறையின் முதல்வராக எடப்பாடி தான் இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றுகிறது. உடனடியாக இந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும்.

அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கி அவர் கையில் இருந்த செல்போனை திருடி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தி உள்ளோம் அப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், சட்ட போராட்டம் மேற்கொள்ள தயாராக உள்ளோம். எங்கள் பொதுச் செயலாளருக்கு தகவல் தெரிவித்தோம் சட்டப்படி என்ன நட வடிக்கை இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி, அவரது பாதுகாவலர் கிருஷ்ணன், செந்தில்நாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளோம்.

scroll to top