மதுரை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற 40,000 அமெரிக்க டாலர் கொண்டு செல்ல முயன்ற 2 கைது

மதுரை விமான நிலையத்தில், இலங்கை இலங்கையிலிருந்து 126 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்., அதே விமானத்தில் இலங்கை செல்வதற்காக வருகை புரிந்த 111 விமான பயணிகளிடம் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்தனர்.
அதில், சந்தேகத்திற்கு விதமாக சுற்றி திரிந்த 2 நபர்களை அழைத்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, இலங்கைக்கு சுற்றிப்பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளனர். பிடிபட்ட இருவரும் ஒரே மாதிரியான காலணியை அணிந்திருந்தது சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகமடைந்த சுங்க இலாகா நுண்ணறிவு பரிசோதனை செய்ததில், இருவரது காலணிக்குள் 10000 அமெரிக்க டாலர்கள் வீதம் நான்கு காலனியில் சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மறைத்து கொண்டு செல்ல இருந்தனர். கடத்த முயன்ற அமெரிக்க டாலரின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 30 லட்சம் என தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலர்களை கடத்த முயன்ற இருவர்களில், ஒருவர் இலங்கையைச் சேர்ந்த சிரஜுள் நாதிர் என்பவரது மகன் மொகமத் அஜ்மீன். மற்றொருவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெய்னுலாப்தீன் என்பவரது மகன் சிக்கந்தர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

scroll to top