மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

Screenshot_20220411-121024_Chrome.jpg

பன்னிரு நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவுல்  இன்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

நாளை  ஏப்ரல் 15ந்தேதி  வெள்ளிக்கிழமை – திருத் தேரோட்டமும் (ரத உட்சவம்), ஏப்ரல் 16ந்தேதி  2022– சனிக்கிழமை – தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில்  காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார்.  அன்று இரவு தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

scroll to top