உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மன் சுவாமி சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கோவிலுக்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் ஆசிர்வாதத்துடன் இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று தற்போது அமைச்சராகிய வந்து மீனாட்சி அம்மனிடம் ஆசீர்வாதம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை ரோஜா சாமி தரிசனம்
