மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாஜக ஆர்ப்பாட்டம்

WhatsApp-Image-2023-05-08-at-13.55.52.jpg

மதுரையில் பாஜகவினர், சித்திரை திருவிழாவில், அழகர் இறங்கும் போது கூட்ட நெரிசலில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிதி வழங்க கோரியும், சித்திரைத் திருவிழா அரசாணை வெளியிடக் கோரியும், மதுரை மாவட்ட பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மதுரை மாவட்டம் பாஜக நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமை வகித்தார்.
ஊடகப் பிரிவு நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டமானது, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து பாஐக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், சில நேரம் போக்குவரத்து தடைபட்டது. ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை அடுத்து, சித்திரை திருவிழாவில் இறந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி பாஜக நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

scroll to top