மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

WhatsApp-Image-2021-10-11-at-4.08.30-PM.jpeg

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாகவே, மாலை வேலைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மதுரை அருகே பரவை, விளாங்குடி, சமயநல்லூர், தேனூர், மேலூர், ஒத்தக்கடை, சோழவந்தான், கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரை பழங்காநத்தம், பைபாஸ் சாலை, காளவாசல், ஆண்டாள்புரம், வசந்த நகர் ,டிவிஎஸ் நகர் ,முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் தண்ணீர்கள் ஆறு போல ஓடியது. பள்ளி விடும் நேரம் என்பதால் ,பள்ளி மாணவ மாணவிகள் நனைந்து செல்லும் அவலம் ஏற்பட்டது.

scroll to top