மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் துணை மேயர் அறிமுகப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்:

WhatsApp-Image-2022-03-03-at-9.43.17-PM.jpeg

மதுரை மாநாகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 80 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. நாகராஜன், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உடன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வசந்தன், நரசிம்மன், ரமேஷ், ஆகியோர் இருந்தனர். டி.நாகராஜன் (வயது 45) சமூகவியலில் பட்டப்படிப்பையும் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பையும் ( எம்.ஏ.பி.எல்) முடித்துள்ளார். இளவயதிலேயே, பொது வாழ்விலும், மக்கள் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக செயல்பட்டவர். மாற்று திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவராக தற்பொழுது செயல்பட்டு வருபவர். 1994 ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து கிளைச் செயலாளராக, ஜெய்ஹிந்தபுரம் பகுதிக் குழு உறுப்பினராக செயல்பட்டு தற்போது கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினராக தற்பொழுது செயல்பட்டு வருபவர் என, பத்திரிகையாளர் சந்திப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்தார்..

scroll to top