மதுரை மாநகராட்சி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம்:

Pi7_Image_WhatsAppImage2022-09-19at12.46.01.jpeg

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில், வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக அரசரடி நீரேற்று நிலையம் செல்லும் ராட்சத குழாய் செல்கிறது. கடந்த ஒரு மாதமாக முள்ளிப்பள்ளம் பகுதியில், உள்ள குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாகவும். அதிகப்படியான நீர் வெளியேறுவதால் தேங்கிய நீரின் மூலம் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள்‌ மதுரை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்திடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மேலும், இப்பகுதி பொதுமக்கள் சிலர் நேரில் சென்று தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆகையால், மதுரை மாநகராட்சி நிர்வாகமும் ,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நீர் செல்ல வழிவகுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், வீணாகும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும் சாக்கடை நீர் குடிநீர் குழாய்க்கு செல்வதாலும் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர் . மேலும், இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகத்திடம் முள்ளிபள்ளம் ஊராட்சி மன்றம் சார்பில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

scroll to top