மதுரை மாநகராட்சியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

WhatsApp-Image-2023-03-02-at-14.14.47.jpg

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சியில் அவனியாபுரம் நூறாவது வார்டு பகுதியைச் சேர்ந்த வல்லானந்தபுரம், சந்தோஷ் நகர் மற்றும் ஜே.ஜே நகர் பகுதியில் சாலைகள் மற்றும் பாதாள சாக்கடைகள் மோசமான நிலையிலும் குடிநீர் மற்றும் மின் விளக்கு வசதிகளும் இல்லாததால், 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக அரசு பதவியேற்று இரண்டு வருட காலங்கள் ஆகியும் இன்னும் நீதி பற்றாக்குறை என்று கூறிக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவனியாபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலை பாதாள சாக்கடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை மாநகராட்சி, நிர்வாகம் பெரிதும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதைப்பற்றி பல்வேறு முறை அரசு அதிகாரிகளிடம், திமுக மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும் நிதி பற்றாக்குறையால் எங்களால் சரி செய்ய முடியவில்லை என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். அரசாங்கம் இதை தலையிட்டு உடனே இந்த பகுதியினை சரி செய்ய வேண்டும். திமுக எங்களுடைய கூட்டணி கட்சியா இல்லை என்பது வேறு எங்களுக்கு இந்த பகுதியில் பிரச்சனையை முதலில் சரி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

scroll to top