மதுரை பள்ளியில், புகைப்படக் கண்காட்சி

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் பேரில், மதுரை ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சியை, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயக்குமாரி ஜெமி ரத்தின , மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் முத்துச்சாமி, மாவட்ட ஆலோசனைக் குழு செயலர் தீபா, மாரிமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி அலுவலர் வி. விநோத், ஆப்ரேட்டர் ராஜ்குமார், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

scroll to top