மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 நாள் “பேர்புரோ-‌2023” கட்டுமான விற்பனை கண்காட்சி :

.jpg

மதுரை தமுக்கம் கான்வெகேசன் ஹாலில் வருகின்ற 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை மதுரை “கிரெடாய்” அமைப்பு நடத்தும் வீடுகள் விற்பனை கண்காட்சி (ஃபேர்புரோ-2023) நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில், வீடு விற்பனையார்கள், கட்டுமான பொருள் விற்பனையாளர்கள், வீடு கட்ட கடன் பெறுவதற்கான வங்கிகள் உள்ளிட்ட 100 மேற்பட்ட அரங்குகளுடன் நடைபெறுகிறது.
இக்கண்காட்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியிலுள்ள ஜே.சி ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் “கிரெடாய்” அமைப்பின் தலைவரும் விஷால் குழும சேர்மனுமான ஆர்.இளங்கோவன், மேக்ஸ் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், விஜயதயா ரியல்டர்ஸ் செயலாளர் முத்து விஜயன், ஜெயபாரத் ஹோம்ஸ் பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியின் சிறப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

scroll to top