மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

vlcsnap-2023-04-23-15h17m34s746.png

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். உலகமே கொண்டாடும் மதுரையின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்,கூடுதல் ஆட்சியர் சரவணன், மேயர் இந்திராணி பொன் வசந்த் ,காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

scroll to top