மதுரை கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்

கார்த்திகை மாதத்தை ஒட்டி, ஐயப்ப பக்தர்கள் முருக பக்தர்கள் மாலையிட்டு விரதத்தை தொடங்கினர். மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படைவீடு என்று சோலைமலை முருகன் கோவிலில் முருக பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியை ஒட்டி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து, அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி மற்றும் கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார்,  காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகியோரை  தரிசனம் செய்து பக்தர்கள் பிரசாதம் பெற்று சென்றனர். தொடர்ந்து, அலங்காநல்லூர் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதேபோன்று, அலங்கார தெப்பகுளம் முருகன் கோவிலிலும், சோழவந்தான், தென்கரை ஐயப்பன் கோயில்களிலும், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

scroll to top