தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சின்னக்கட்டளை கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய 25 MVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியை (Additional Transformer) பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். இதனையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர், சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி, புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின் மாற்றியை பார்வையிட்டார். அருகில் மின்வாரிய பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மதுரை அருகே புதிய மின்மாற்றி தொடக்க விழா
