மதுரை அருகே நாய்கள் விஷம் வைத்து கொலையா?

WhatsApp-Image-2023-03-13-at-6.53.11-PM-rotated.jpeg

விக்கிரமங்கலம் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலையை, மர்ம நபர்கள் கைவரிசையால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்ததால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் இறந்த நாயின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விஷம் கலந்த உணவை மர்ம நபர்கள் ஆங்காங்கே வீசியதால் அதனை சாப்பிட்ட நாய்கள் உயிரிழந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக, மயில்,நாய்கள், சாலையில் திரியும் காளைகள் ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் விஷம் வைக்கும் சம்பவமானது தொடர் கதையாகவே உள்ளது.
இதை தடுக்க பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை, விலங்குகள் நல வாரியம் ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

scroll to top