மதுரை அருகே நடந்து சென்ற பள்ளி ஆசிரியையிடம், கைபேசி திருட்டு

WhatsApp-Image-2023-04-18-at-9.17.40-PM.jpeg

மதுரை,திருநகரில் பூங்காவின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மாஸ்க் அணிந்து செல்போனை பிடுங்கி சென்ற வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணிடம் செல்போனை பிடுங்கி செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் அண்ணா பூங்காவில் அருகே சித்ராதேவி(30).
நடந்து வந்துள்ளார். முகக்கவசம் அணிந்து இருசக்கர இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றனர். செல்போனை திருடி செல்லும் பரபரப்பான செய்தி காட்சிகள் வெளியாகின.

சித்ராதேவி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவர், தனது ஆசிரியர் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் அவருக்கு பின்னே இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்துவந்த இரண்டு மர்மநபர்கள் செல்போனை பறித்துத்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து, சித்ராதேவி அருகில் உள்ள திருநகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பம்அறிந்து விரைந்து வந்த திருநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நடந்து சென்ற ஆசிரியையிடம் பட்டப் பகலில் இச்சம்பவம் அரங்கேறியதால் திருநகர் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

scroll to top