மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

WhatsApp-Image-2022-06-11-at-11.07.35-AM.jpeg

மதுரை அருகே சுயம்பு ஆஞ்சயேருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை சிவகங்கை சாலையில் , கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள
சுயம்பு ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் இன்று காலை, பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு துளசி மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . இதில், பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இத்திருக்கோவிலில், வாரம்தோறும் சனிக்கிழமை காலை 7. 15 மணி அளவில் ,சுயம்பு ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை கொண்டுவரலாம் என, கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர் .

scroll to top