மதுரை அருகே சக்கிமங்கலத்தில் பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு விழா

மதுரை அருகே சக்கிமங்கலத்தில் எஸ்.கே.பி. நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில், பெண்களுக்கென, ஸ்வீச் பாரத திட்டத்தின் கீழ், புதிய நவீன கழிப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேலு வரவேற்றார்.
சக்கிமங்கல ஊராட்சித் தலைவி நாகலெட்சுமி, துணைத் தலைவர் கபகதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை சுங்கத்துறை இணை ஆணையர் என். ராம்குமார் சிறப்புரை ஆற்றினார்.துணை ஆணையர் நாராயணன், பொறியாளர் சிவக்குமார், கண்காணிப்பாளர்கள் அணில்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில், அறிவியல் பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார்.

scroll to top