மதுரை அருகே கள்ளழகர் தெப்பத் திருவிழா: குவிந்த கிராம மக்கள்

WhatsApp-Image-2023-03-07-at-17.54.02-1.jpg

​மதுரை அருகே உள்ளது கள்ளழகர் திருக்கோயில் ஆகும். ஆழ்வார்கள் பாடல் பெற்று புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது.  இங்கு , வருடத்தில் மாசி மாதம் பௌர்ணமி அன்று தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அதேபோன்று ,இந்த ஆண்டும் தெப்ப திருவிழா நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் தெப்பத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இதில், மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெரிய புல்லான் என்ற செல்வம், தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, பொய்கைகரைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி வீரணன், மதுரை மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் துணை ஆணையருமான மு.  ராமசாமி செய்திருந்தார். இதைக் காண, சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை, கள்ளந்திரி போலீசார் ஈடுபட்டிருந்தனர். மாசி மகம் என்பதால், சிவகங்கை அருகே திருக்கோஷ்டியூர் சௌமின் நாராயணன் பெருமாள் கோயிலிலும் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மாசி மகத்தையொட்டி, ஏராளமான பெண்கள், திருக்கோஷ்டியூர் தெப்பத்தை சுற்றி விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, குன்றக்குடி பகுதிகளிலிருந்து, அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் சிறப்பு பஸ்களை, திருக்கோஷ்டியூருக்கு இயக்கியது.

scroll to top