மதுரை அருகே ஓடும் காரில் தீ விபத்து

WhatsApp-Image-2023-04-16-at-14.23.05.jpg

ஓடும் காரில் திடீர் தீ விபத்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர்களும் பயணித்தவர்களும் உடனடியாக கீழே இறங்கியதால் காயம் இன்றி உயிர்த்தப்பினர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை அருகே மதுரை கப்பலூரிலிருந்து டைல்ஸ் வாங்கிக்கொண்டு மதுரை சிந்தாமணியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர், மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது, திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை ரவுண்டானா அருகே வரும் பொழுது, காரில் புகை வந்ததை கண்டு சுதாரித்துக் கொண்ட சோமசுந்தரம், உடனடியாக சாலையில் ஓரமாக வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்தவர்களும் உடனடியாக கீழே இறங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் திடீரென மலமளவென எளிய தொடங்கியது.
இதை பார்த்த பொதுமக்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது .

முதற்கட்ட விசாரணையில், சுமார் 10 ஆண்டு பழமையான கார் எனவும், இது கேஸ் லீக் ஆனதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது. உரிய நேரத்தில் சுதாரித்துக் கொண்டு இறங்கியதால், அவர்கள் காயம் என்று உயிர் தப்பினர். சம்பவம் குறித்து, திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், திருப்பரங்குன்றம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனினும், திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்து பாதிக்காத அளவிற்கு துரித நடவடிக்கை எடுத்தார்கள்.
இதனால், திருப்பரங்குன்றம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

scroll to top