மதுரை அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

WhatsApp-Image-2023-05-07-at-11.42.55.jpg

திருமங்கலத்தில், கல்வித்தந்தை காமராஜரின் நினைவாக , மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கல்வி தந்தை காமராஜர் நினைவாகவும் , மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை, நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.

இம் முகாமில், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டு பகுதிகளில் இருந்தும், திருமங்கலம், கள்ளிக்குடி பகுதியிலுள்ள 42 கிராமங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

பொது மக்களுக்கு, கண்களில் உள்ள இரத்த அழுத்தம் மற்றும் கண் பார்வை மங்குதல் உள்ளிட்ட குறைபாடுகளை முழுமையாக பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டது..

scroll to top