மதுரையில் வீடு வீடாக சென்று முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட கழகச் செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில் 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, 6ம் பகுதிக்கு உட்பட்ட 52-வது வார்டில் மேல ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் .குடிநீர் விநியோகம் சரிவர கிடைக்காதவர்களுக்கு தடையில்லாமல் கிடைக்கவும், பாதாளச் சாக்கடை பிரச்சினையை சீர் செய்யவும், குப்பை தொட்டியை பராமரித்து, குண்டும் குழியுமாகவும் மிகவும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரவும், ஏழை-எளிய விதவை பெண்கள், மற்றும் முதியோர்களுக்கு முதியோர் பென்சன் கிடைத்திட, பொது குடிநீர் குழாயை அதிகப்படுத்த அரசு நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திட ரேஷன் கடை மற்றும் விநியோகம் சீராக கிடைக்க தெருவிளக்குகள் சீரமைக்க தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு அளித்தால் அனைத்தும் செய்து தரப்படும், தெருவில் உள்ள மக்களுக்காக அடிப்படை உரிமைகள் மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை பதிவு செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என்று வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ச் செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டனுக்கு, உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜாமணி,எஸ்வின் பாபு, பொதுக்குழு உறுப்பினர், ஜெயராமன், பகுதி கழக செயலாளர்கள் மோகன், பத்மநாபன், தனபால், மாரியப்பன் மாணிக்கவாசகம், இப்ராஹிம், வார்டு வட்ட கழகச் செயலாளர் பால்பாண்டி . சந்தோஷ் அல்லு, பாலாஜி, சாஜித், கார்த்திகேயன், பாலாஜி, அசோக், சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

scroll to top