மதுரையில் வி.சி.க. சாலை மறியல் – போலீஸார் சமரசம்

WhatsApp-Image-2023-04-14-at-20.51.53.jpg

மதுரை விமான நிலைய சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வந்த விசிக காவினரை மாற்றுபாதையில் செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்பேத்கரின், 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், மதுரை பெருங்குடி விமான நிலைய சாலையில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது , அம்பேத்கர் சிலைக்கு செல்வதற்கு பெருங்குடி சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையை கடந்து செல்ல வேண்டும் என்பதால், காவல்துறையினர் விடுதலை சிறுத்தை கட்சியினரை தடுத்து நிறுத்தினர் .

மேலும், அவர்களை மாற்று பாதையில் போக சொல்லி அறிவுறுத்தியதில். அவர்கள் அதை ஏற்க மறுத்து தற்போது, ஆண்கள் பெண்கள் என , 100 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, விசிக கட்சியினரை, போலீஸார் அழைத்துச் சென்று, அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

scroll to top