மதுரையில் விற்பனை பிரதிநிதிகள் நலவாரியம் அமைக்க கோரிக்கை

WhatsApp-Image-2021-10-06-at-4.51.26-PM.jpeg

சென்னையில் அக்., 17-ல் நடக்கும் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல வாழ்வு சங்க மாநில மாநாட்டில் நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றி அரசிடம் வலியுறுத்தப்படும் என, மதுரையில் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிறுவனத் தலைவர் கமல்ராஜ், மாநிலத் தலைவர் சந்திரபிரபாகர், மாநிலச் செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது: குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிப்பது குறித்து நிறுவனங்களிடம் அரசு வலியுறுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விற்பனை பிரதிநிதிகளுக்கு துறை சார்ந்த பயிற்சி அளிக்க வேண்டும். விற்பனை துறையினர் விபத்தில் பாதிக்கப்படும் போது பணிபுரியும் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

சரியாக வேலை பார்த்து நிறுவனத்திடம் இருந்து சம்பளம், தினப்படி, பயணப்படி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றனர்.

scroll to top