மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில், 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை ராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும் நல சங்க கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு முன்னாள் படை வீரர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவும், அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவும், துணை ராணுவ படை வீரர்களின் குழந்தைகளுக்கு மத்திய ‘ மாநில அரசு பள்ளி ,கல்லூரி பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற வேண்டும்,
.முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு மருத்துவ மற்றும் மறுவாழ்வு மையம் அளிக்க வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட 10 திருமணங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் படை வீரர்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுத்து விடியலை ஏற்படுத்தி தர வேண்டும் என, முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டத்தில் கூறினர்..