மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன்,
முன்கள பணியாளர்கள் அனைவரும் இந்த கொரானா பூஸ்டர் தடுப்பூசி போட உத்தரவிட்டு
ள்ளார்கள்.
பூஸ்டர் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக முன் உதாரணமாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரானா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.
மேலும், மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இந்த பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள்.
அதேபோல், பொதுமக்களும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இந்த பூஸ்டர் தடுப்பு ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்