மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கொரோண மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக வரும் 12ம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கும் பொங்கல் விழா ஒத்தி வைக்கப்படுவதாக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 12 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தமிழகம் வந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பா.ஜ.க, சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்பார் என அறிவித்திருந்தது. இந்நிலையில், அண்ணாமலை கூறியதாவது: வருகிர 12ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. என்றும் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறாரா என்பது குறித்து தமிழக அரசு தான் கூற வேண்டும் எனக்கூறினார்.

scroll to top