மதுரையில் நவீன முறையில் கம்பத்தில் போக்குவரத்து சிக்னல் விளக்கு

WhatsApp-Image-2021-11-21-at-1.36.54-PM.jpeg

நாடு முழுவதும் வழக்கமான போக்குவரத்து சிக்னல்களான வட்டவடிவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகனநெரிசலின் போது போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஒட்டிகளுக்கு புலப்படாததால் போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து துறை சார்பில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் முதல்முறையாக நவீன முறையில் கம்பத்தில் எல்.இ.டி. சிக்னல் விளக்குகளான சிக்னல் ரூபாய் 25,000 மதிப்பீட்டில் பொறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ,ஒளி அளவுரு பெரிய பரப்பளவை உள்ளடக்கிய எல்.இ.டி. விளக்குகளில் ஒவ்வொரு ஒளி மாற்றத்திற்கும், குறுக்குவெட்டுகளில் பாரம்பரிய ஒளி அமைப்பிற்குப் பதிலாக முழுமையான கம்பம் ஒளிருவதால் வாகன ஒட்டிகளும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற எளிதாக இருப்பத்தாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, இந்த முறை சிக்னல்கள் சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாநகர் முழுவதும் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போக்குவரத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top