மதுரையில் தார்ச்சாலையை, அமைச்சர் திறந்து வைத்தார்

WhatsApp-Image-2021-10-14-at-1.48.38-PM.jpeg

மதுரை மாநகர் 10- வது வார்டு டி டி சாலை பகுதியில் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் (2016 – 2021 )இருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மேலும், அமைச்சர்,மதுரை மாநகர் 18- வது வார்டு, எஸ். பி. ஓ. ஏ காலனி பகுதியில், மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து (2020 -2021 )17 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் விளக்குடன் கூடிய சிறுவர் பூங்காவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அமைச்சருடன், முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

scroll to top