மதுரையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை நூற்றுக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது

WhatsApp-Image-2023-05-10-at-10.40.24-AM.jpeg

மதுரை மாநகர், பகுதியான தல்லாகுளம் அண்ணா நகர் கேகே நகர் கோரிப்பாளையம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ,
பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

சில இடங்களில் மரங்கள் விழுந்ததில் மின்மாற்றில் உரசியதில் மின்மாற்றி திடீர் திடீர் என வெடித்து சிதறியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜாஜி பூங்கா அருகே உள்ள சோலைமலை முருகன் கோவில் உள்ள மரங்கள் வேரோடு கோபுரத்தின் மேல் விழுந்தது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், கோபுரத்தின் மேலும் மரங்கள் விழுந்து கிடந்தது.

தகவல் அறிந்த, மதுரை தல்லாகுளம் மற்றும் தீயணைப்பு பேரிடர் மீட்பு குழுவினர் சோலைமலை முருகன் கோவில் கோபுரத்தின் மேல் விழுந்த மரங்களை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு மரங்களை அகற்றினர். மேலும், சாலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்ததால் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சாலையில் கிடந்த மரங்களை மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு இரவு முழுவதும் மரங்களை அகற்றினர்.

மதுரை நகரில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால், மதுரை அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம் பகுதிகளில் சாலைகளில், மழைநீர் குளம் போல தேங்கின.

scroll to top