மதுரையில் வைகை மற்றும் பெரியார் பாசனத்தின் மூலம் அதிகமாக நெல் விவசாயம் நடைபெறுவதால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை பாதுகாக்க கூடுதலாக சேமிப்பு கிடங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் மழையால் நெல் மூடைகள் வீணாகாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதுவரையில் கொள்முதல் மையங்களில் பெறப்படும் நெல் மூடைகளை பாதுகாத்து வைக்காமல் உடனடியாக நெல்லை அரைவை மையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 3 லட்சம் மெட்ரிக் டன் இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார் .