முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை மீண்டும் பரிசீலனை செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் மதுரை தல்லாகுளம் அஞ்சல் அலுவலகம் முன்பாக வாயில் துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்திற்கு, மதுரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ய கூடாது, உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, கோஷங்களை எழுப்பினர்.
மதுரையில், காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதன போராட்டம்
